டெக்

ஐபோன் vs ஆன்ட்ராய்ட் எது ஸ்பீட் ? - பகிரப்படும் வீடியோ..!

webteam

ஐபோன் மொபைலுக்கும் ஆன்ட்ராய்டு மொபைலுக்கும் இடையே எது வேகம் ? என நடத்தப்பட்ட சோதனை வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

உலகெங்கும் உள்ள மக்களிடம் ஸ்மார்ட்போன்கள் பரவியுள்ளன. இதில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது இரண்டு இயங்குதளங்களில் தான். அதில் ஒன்று ஆன்ட்ராய்டு, மற்றொன்று ஐஓஎஸ். ஐஓஎஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்பில் உருவான இயங்குதளம் ஆகும். இந்த இரண்டு இயங்குதளங்களில் எது சிறந்தது என்ற விவாதம் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக ஓயாத ஒன்றாக இருக்கிறது.

இந்நிலையில் ஐபோனா ? ஆன்ட்ராய்டா ? எது வேகமானது என்பதை நிரூபிக்கும் வகையில் நெட்டிசன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் ஆன்ட்ராய்டு போன் அருகே ஐபோனை வைத்து இரண்டு போன்களிலும் ஒரே நேரத்தில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்பும் மற்றும் கேம் செயலிகளை இயக்குகிறார். அனைத்திலுமே ஆன்ட்ராய்டு போன் தான் வேகமாக செயல்படுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் ஐபோனை விமர்சித்துள்ளனர்.

ஆனால் வரிந்துகட்டிக்கொண்டு வந்த ஐபோன் வாடிக்கையாளர்கள், உங்கள் போனில் சில விநாடிகள் வேகம் இருக்கலாம், ஆனால் கேமரா மற்றும் தொழில்நுட்பங்களில் ஐபோனுக்கு நிகராக ஆன்ட்ராய்டு வரமுடியாது என்று கூறியுள்ளனர். அதற்கு பதிலளித்து ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள், ஐபோன் விலையில் பாதி விலையைக்கொண்டு வாங்கப்படும் ஆன்ட்ராய்டு போன்கள், ஐபோனை விட வேகமாக செயல்படுவதே சிறந்தது என்று தெரிவித்துள்ளனர்.