டெக்

இரட்டை கேமராவை கொண்ட சாம்சங் கேலக்ஸி - கசிந்தது புகைப்படங்கள்

இரட்டை கேமராவை கொண்ட சாம்சங் கேலக்ஸி - கசிந்தது புகைப்படங்கள்

Rasus

இரட்டை கேமராக்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி C10-ன் புதிய புகைப்படங்கள் இணையதளத்தில் கசியவிடப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸியின் நோட் 8 வெளியிடப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி C10-ன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களில் உள்ள ஸ்மார்ட்போனில் இரட்டை கேமராக்கள் உள்ளன. கேமராக்களின் நடுவில் எல்.இ.டி.பிளாஷ், ஆண்டெனா கோடுகள், பவர் லாக் உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த போன் ரோஸ் நிறம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி C10-ன் சிறப்பம்சங்கள் குறித்தும், இந்த வகை ஸ்மார்ட்போன்கள் எப்பொழுது சந்தையில் விற்பனைக்கு வரும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.