டெக்

பிங்க் வாட்ஸ் ஆப் லிங்குகளால் செல்போன்கள் ஹேக் செய்யப்படலாம்!- எச்சரிக்கும் காவல்துறை

webteam

பிங்க் வாட்ஸ் ஆப் என்ற பெயரில் பரவும் லிங்குகளால், செல்போன்கள் ஹேக் செய்யப்படலாமென அடையாறு காவல் துணை ஆணையர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் கூறும் போது, “ "பிங்க் வாட்ஸ் ஆப் " அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ வரும் ஆப்களை பதிவிறக்கம் செய்யவோ, பகிரவோ வேண்டாம். ஏனெனில் இந்த ஆப்கள் மூலம் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்பட கூடும்.” என எச்சரித்துள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாட்களாகவே பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பிங்க் வாட்ஸ்அப் என்ற ஒரு லிங்க் வைரலாக பரவி வருகிறது. அது வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட் என சொல்லி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த லிங்கை ஓபன் செய்து இன்ஸ்டால் செய்த சிலரது மொபைல் போன் வைரஸால் தாக்கப்பட்டு அவர்கள்து டேட்டாக்கள் திருடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கும் அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.