டெக்

ஐடியாவில் புதிய டேட்டா திட்டம்

ஐடியாவில் புதிய டேட்டா திட்டம்

webteam

ரூ.453-க்கு ரீசார்ஜ் செய்து 84ஜிபி டேட்டாவைப் பெறும் திட்டத்தை ஐடியா அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ சேவையின் எதிரொலியால் நாளுக்கு நாள் பல டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதாவது ஐடியா நிறுவனம் தற்போது புதிய டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.453-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி டேட்டாவைப் பெறமுடியும். மேலும் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும். மேலும் ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் வீதம் வாரத்திற்கு 1,200 நிமிடங்கள் இலவசமாக செல்போன் அழைப்புகள் மேற்கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஜியோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ள ஆபர் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா பயன்படுத்தலாம் என தெரிவித்தது.