டெக்

கூகுள் மேப்ஸுக்கு போட்டியாக ஹவாயின் 'மேப் கிட்'  

கூகுள் மேப்ஸுக்கு போட்டியாக ஹவாயின் 'மேப் கிட்'  

webteam

கூகுள் மேப்ஸுக்கு மாற்றாக 'மேப் கிட்' என்ற சேவையை ஹவாய் தற்போது உருவாக்கி வருகிறது.

உலக செல்போன் சந்தையில் இரண்டாமிடத்தில் இருக்கும் சீனாவின் ஹவாய் நிறுவன போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. 

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் இதற்கு காரணமாக அமைந்த நிலையில் ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக ஹார்மனி என்ற இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது ஹவாய். ஆண்ட்ராய்டை போலவே இதுவும் ஓபன் சோர்ஸ் என்பதால் தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் அனைத்து செல்போன்களிலும் இதனைப் பயன்படுத்த இயலும் என்பது சிறப்பு. 

இந்நிலையில் கூகுளின் பிரபலமான கூகுள் மேப்ஸுக்கு மாற்றாக மேப் கிட் என்ற சேவையை ஹவாய் தற்போது உருவாக்கி வருகிறது. உள்நாட்டு வரைபடங்கள், 150 நாடுகளின் வரைபடங்கள் என 40 மொழிகளில் மேப் கிட்டை உருவாக்கி வருவதாக ஹவாய் தெரிவித்துள்ளது. மேப் கிட் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளிவரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.