டெக்

ஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..!

ஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..!

webteam

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘என்ஜாய் 10’ மாடலின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

சீன நிறுவனமான ஹூவாய் இந்திய சந்தையில் பெரும் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த மாதம் ‘என்ஜாய் 10 பிளஸ்’ என்ற புதிய மாடல் செல்போனை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து ‘என்ஜாய் 10’ என்ற ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. இந்நிலையில் ‘என்ஜாய் 10’ மாடலின் சிறப்பம்சங்களில் சில இணையத்தில் கசிந்துள்ளன. 

அதன்படி, ‘என்சாய் 10’ மாடல் ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டதாம். அக்டோ-கோர் ஹாய்சிலிகான்  கிரின் 710 சோசி பிராசஸருடன் செயல்படுமாம். கேமராவை பொறுத்தவரையில் பின்புறத்தில் 48 எம்பி (மெகா பிக்ஸல்) மற்றும் 8 எம்பி என இரட்டை கேமரா உள்ளதாம். மேலும், 8 எம்பி செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளதாம். இதில் 3,900 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.