டெக்

வாட்ஸ் அப்பில் தகவல்களை ஷெட்யூல் செய்வது எப்படி?

webteam

வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. 

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சேவைகளில் தகவல்களை ஷெட்யூல் முறையில் பகிரலாம். அதாவது ஒரு பதிவை இரவு 12 மணிக்கு பதிவிட வேண்டுமென்றால் 9 மணிக்கே அந்தப் பதிவை ஷெட்யூல் செய்துவிட்டால் போதும். சரியாக 12 மணிக்கு அது தானாகவே பதிவாகிவிடும். இந்த வசதி வாட்ஸ் அப்பில் கிடையாது. வாட்ஸ் அப்பை பொறுத்தவரை ஆன்லைனில் இருந்தால் மட்டுமே தகவல்களை அனுப்ப முடியும். 

ஆனால் ஷெட்யூல் வசதி இருந்தால், பிறந்தநாள் , புத்தாண்டு மாதிரியான முக்கிய தினங்களின் வாழ்த்துகளை ஷெட்யூல் தெரிவிக்கலாம் என்று பயனாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் வாட்ஸ் அப்பின் நோக்கம் உடனடி தகவல் பரிமாற்றம் என்பதால் ஷெட்யூல் சாத்தியமில்லை என வாட்ஸ் அப் நிறுவனம் கருதுவதாக கூறப்படுகிறது.

ஆனால் ஷெட்யூல் தேவை என்று விரும்புவர்கள் பிளே ஸ்டோரில் இருந்து மற்றொரு செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் செயலி மூலம் போட்டோ மற்றும் வீடியோக்களை கூட அனுப்பலாம்.

என்ன செய்ய வேண்டும்?

  • பிளே ஸ்டோரில் சென்று WhatsApp scheduler என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியை திறந்தால் செயலின் வலது புற கீழ்ப்பகுதியில் இருக்கும் + குறியை அழுத்தி வாட்ஸ் அப் எண் மற்றும் குழுக்களை இணைத்து கொள்ளலாம்.
  • பிறகு நாம் அனுப்ப வேண்டிய நேரம் மற்றும் தேதியை பதிவு செய்து அனுப்ப வேண்டிய தகவலையும் டைப் செய்து கொள்ள வேண்டும். வலது புறத்தின் மேல் பகுதியில் கிரியேட் பட்டனை அழுத்துவதன் மூலம் நாம் அனுப்ப வேண்டிய தகவல் ஷெட்யூல் ஆகும்.