ஆதித்யா எல் 1
ஆதித்யா எல் 1  x வலைதளம்
டெக்

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் தொலைநோக்கி செயல்பட்டது எப்படி? வெளியான வீடியோ

PT WEB

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் புற ஊதா கதிர் தொலைநோக்கி சூரியனை வெவ்வேறு அலைவரிசையில் படம் எடுத்த நிலையில் அதன் செயல்பாடு தொடர்பான வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் குரோமோஸ்பியர் மண்டலத்தை எடுத்த 12 புகைப்படங்களை கடந்த 8-ஆம் தேதி இஸ்ரோ வெளியிட்டது.

தொலைநோக்கியின் இயக்கம் தானியங்கியாக தரைத்தளத்தின் சமிக்கை மூலம் செயல்பட்டுள்ளது. தொலைநோக்கியின் மூடி தானியங்கியாக திறக்கும் காட்சிகள் இஸ்ரோ  வெளியிட்டுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 7ஆம் தேதி ஆதித்யா எல்1 விண்கலம் லெக்ராஞ்சியன் புள்ளியை அடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ள நிலையில், மொத்தம் உள்ள 15 லட்சம் கிலோ மீட்டரில் சுமார் 14.5 லட்சம் கிலோ மீட்டரை  ஆதித்யா விண்கலம் கடந்துள்ளது.