டெக்

48 எம்பி கேமராவுடன் வெளியானது ஹானர் “வியூவ் 20” - இந்தியாவில் எப்போது?

webteam

ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான “வீயூவ் 20” இன்று உலக சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹானர் நிறுவனம் “வீயூவ் 20” ஸ்மார்ட்போனை 48 மெகா பிக்ஸல் கேமராவுடன் வெளியிட்டுள்ளது. பாரிஸ் நகரத்தில் இன்று வெளியான இந்த போன், இந்தியாவில் ஜனவரி 29ஆம் தேதி முதல் விற்பனையாகிறது.

இந்தியாவில் இரண்டு ரகங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், இந்திய மதிப்பில் ரூ.40,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ரேம் மற்றும் இண்டெர்நல் ஸ்டோரேஜ் அளவை பொறுத்து சிறு மாறுதல் பெறலாம். நீலம், சிவப்பு மற்றும் நள்ளிரவு கருமை ஆகிய நிறங்களில் இது வெளியாகிறது. கைரேகை பதிவு அனலாக் உள்ளது.

சிறப்பம்சங்கள் :

ரேம் : முதல் ரகம் - 6 ஜிபி, 2ஆம் ரகம் - 8 ஜிபி

இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 128 ஜிபி மற்றும் 256 ஜிபி

டிஸ்ப்ளே : 6.4 இன்ச், ஃபுல் ஹெச்டி

ஆண்ட்ராய்டு : 9.0 பெயி

பின்புற கேமரா : 48 எம்பி

செல்ஃபி கேமரா : 25 எம்பி

பேட்டரி : 4,000 எம்.ஏ.எச் திறன்