டெக்

இந்தியாவில் வெளியான ‘ஹானர் 10 லைட்’ ஸ்மார்ட்போன்

webteam

ஹானர் ஸ்மார்ட்போனின் ‘10 லைட்’ என்ற புதிய மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது.

ஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் இன்று இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த போனை பொறுத்தவரை கிரின் 710 எஸ்ஒ.சி ப்ராசஸருடன் செயல்படும். 6.21 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே இதில் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரை 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் இதில் உள்ளது. கூடுதலாக 512 ஜிபி வரை மைக்ரோ சிப் பொருத்தி அதிகரித்துக்கொள்ள முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் நீளம் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இரட்டை நானோ சிம் கார்டுகள் இதில் பொறுத்த முடியும். தற்போதைய இளைஞர்கள் கேம்களை விரும்பி விளையாடுவதால், அதற்கு ஏற்றார்போல இந்த போனின் ப்ராஸர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 13 எம்.பி (மெகா பிக்ஸல்) மற்றும் 2 எம்.பி என இரட்டைக் கேமரா பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 24 எம்பி செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது. விரைவாக ஜார்ச் செய்யும் வசதிகொண்ட 3,400 எம்.ஏ.எச் பேட்டரி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.11,950 என தெரிவிக்கப்பட்டுள்ளது.