டெக்

’மூன்று மாடல்கள்’ - தீபாவளியை முன்னிட்டு அறிமுகமானது நோக்கியா T20 டேப்லெட்!

EllusamyKarthik

HMD குளோபல் நிறுவனத்தின் தயாரிப்பான நோக்கிய T20 டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. தீபாவளியை முன்னிட்டு இந்திய சந்தையில் இந்த சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது. சர்வதேச அளவில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டு 30 நாட்கள் கூட எட்டப்படாத நிலையில் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. 

இதன் சிறப்பம்சங்கள் என்ன?

கேம் பிரியர்கள் மற்றும் அதிகம் வீடியோக்களை பார்ப்பவர்களுக்காக 2K ஸ்க்ரீன் இதில் இடம்பெற்றுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், OZO ஆடியோ, டியூயல் மைக்ரோபோன், 8200 mAh பேட்டரி மாதிரியானவை இதில் இடம் பெற்றுள்ளது. 

வை-பை 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், வை-பை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், வை-பை மற்றும் LTE 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என மூன்று மாடல்களாக இந்த டேப்லெட் சாதனம் சந்தையில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை 15,499 ரூபாய் முதல் தொடங்குகிறது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் இதை பெறலாம். 

மூன்று ஆண்டுகள் வரை மாதந்தோறும் செக்யூரிட்டி சார்ந்த அப்டேட்ஸ்கலையும் இந்த சாதனத்தில் இலவசமாக பெறலாம் என HMD தெரிவித்துள்ளது.