Iphone Ipad Macbook
Iphone Ipad Macbook  Apple
டெக்

ஐஃபோன், ஐபேட், மேக்புக் யூஸரா நீங்கள்... மத்திய அரசு எச்சரிக்கை..!

karthi Kg

Indian Computer Emergency Response Team (CERT-In) குழுவில் இருந்து ஆப்பிள் பயனாளர்களுக்கு high risk எச்சரிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. ஐஃபோன், மேக்புக், ஐபேட், விஷன் ப்ரோ பயனாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய குழு அறிவுறுத்தியிருக்கிறது. 17.4.1க்கு முந்தைய ஆஃப்பிள் சஃபாரி பயனாளர்கள், 13.6.6க்கு முந்தைய ஆப்பிள் macOS ventura பயனாளர்கள், 1.1.1 முந்தைய ஆப்பிள் visionOS பயனாளர்கள், 17.4.1க்கு முந்தைய ஆப்பிள் IOS, IPADOS பயனாளர்கள், 16.7.7க்கு முந்தைய Apple iOS and iPadOS பயனாளர்கள் தங்களின் கேட்ஜெட்களை அப்டேட் செய்துகொள்வது அவசியம். உங்களின் கேட்ஜெட்களை தொடாமலேயே ரிமோட்டில் இருந்துகொண்டே உங்களின் கேட்ஜெட்களில் இருக்கும் தரவுகளை விஷமிகளால் திருட முடியும்.

iPhone 8, iPhone 8 Plus, iPhone X, iPad 5th generation, iPad Pro 9.7-inch, & iPad Pro 12.9-inch 1st generation பயனாளர்கள் 16.7.7 முந்தைய வெர்சன் பயன்படுத்தினால் அதை அப்டேட் செய்துவிடுவது நல்லது.

அதே போல்iPhone XS, iPad Pro 12.9-inch, iPad Pro 10.5-inch, iPad Pro 11-inch, iPad Air, iPad, and iPad mini பயனாளர்கள் தங்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 17.4.1 முந்தைய வெர்சன் என்றால் அதை உடனே அப்டேட் செய்துவிடுவது நல்லது.



macOS Ventura வெர்சன் பயன்படுத்தும் மேக்புக் பயனாளர்கள் 13.6.6 வெர்சன் பயன்படுத்தினால், அதனை அப்டேட் செய்துவிடுவது நல்லது. macOS Sonoma வெர்சன் பயன்படுத்தும் மேக்புக் பயனாளர்கள் 14.4.1 வெர்சன் பயன்படுத்தினால், அதனை அப்டேட் செய்துவிடுவது நல்லது. அதற்கு முந்தைய வெர்சன் பயன்படுத்துபவர்களுக்கும் இது பொருந்தும்.

பொதுவில் இருக்கும் wifi நெட்வொர்க்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரையில் எந்த வகையிலான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.