டெக்

புதிய தொழில்நுட்பத்தில் கையளவு கணினி: 9ஆம் வகுப்பு திருவாரூர் மாணவனின் வியக்கும் சாதனை

kaleelrahman

உலகையே நம் கண்முன் கொண்டுவரும் கணினியில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி கையளவில் கொண்டுவந்து வியக்கச் செய்துள்ளார் 9 ஆம் வகுப்பு மாணவர். தனது அடுத்து படைப்பு விண்டோஸ்க்கு இணையாக இருக்குமென கூறுகிறார்.

கொரோனா ஊரடங்கால் ஓராண்டிற்கு மேலாக வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் 9 ஆம் வகுப்பு பயிலும் மாதவ், திருவாரூரைச் சேர்ந்த மாதவ், வீட்டில் இருந்தே JAVA, C, C++, PHYTHON போன்ற மென்பொருள் அமைப்பு மொழிகளை கற்றார். இதன்மூலம் மென்பொருள் வல்லுநர்கள் வியக்கும் அளவிற்கு கணினியை இயக்கச் செய்யக்கூடிய CPU என்று அழைக்கப்படும் மைய செயலாக்கக் கருவியை கையடக்க அளவில் கண்டுபிடித்தார்.

மும்பையில் இருந்து முக்கிய மதர்போர்டு பாகங்களை வரவழைத்து அதையும் இயக்கி சாதனை படைத்தார். இரண்டு ஆண்டுகளில் 20 முறை கையடக்க CPU-வை இயக்கி தோல்வி கண்ட மாதவ், துவண்டுவிடாமல் 21வது முயற்சியில் வெற்றிபெற்றார். தான் கண்டுபிடித்த கருவி மற்றவர்களுக்கும் கிடைக்க TERABYTE INDIA CPU MANUFACTURING COMPANY என்ற நிறுவனத்தை தொடங்கி உரிய அனுமதியுடன் ஆன்லைன் விற்பனையை தொடங்கியுள்ளார்.

மாதவ் தனது அடுத்த திட்டமாக கணினியை இயங்கச்செய்யும் விண்டோஸ்க்கு நிகராக TB என்ற OPERATION SYSTEM கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மாணவன் மாதவ் கண்டுபிடித்திருக்கும் இந்த கையடக்க மைய செயலாக்கக் கருவி, வரும் நாட்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மாபெரும் புரட்சிக்கு வித்திடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.