தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
ஜிசாட் - 6 ஏ என்ற தகவல்தொடர்பு செயற்கைகோளை இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இன்று மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் 1:56 மணிக்கு தொடங்கியது.
415.6 டன் எடையும், 49.1 மீட்டர் உயரமும் கொண்ட ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகள் வரை செயற்கைகோள் செயல்பாட்டில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவில் செல்போன் சேவைகளை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வளரும் தொழில்நுட்பங்களுக்கு இந்த செயற்கைக்கோள் ஒரு தளமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிலும் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.