டெக்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்

webteam

இன்டர்நெட் சேவை இல்லாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலில் CHROME BROWSER-யை பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனது CHROME BROWSER-யை பிரபலப்படுத்தும் நோக்கில் OFFLINE மோடில் இருக்கும் போது அதை பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த வசதியை வழங்கியுள்ளது. இதன்மூலம் இண்டர்நெட் சேவை இல்லாமல் இணையதளத்தை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளுக்கு இந்தச் சேவையை வழங்கியுள்ளது. இந்தச் சேவையை பெற விரும்புவோர் ஆன்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் க்ரோமின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ள கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.