பிரபல தேடுதளமான கூகுள், தனது 21 வது பிறந்தநாளையொட்டி புதிய டூடுலை வெளியிட்டுள்ளது.
உலகின் பிரபலமான தேடுதளமாக விளங்குகிறது ’கூகுள்’. எந்த சந்தேகம் என்றாலும் அதற்கு கூகுளைத் தேடுவது இப்போது பழக்கமாகிவிட்டது. இந்த கூகுளுக்கு இன்று 21 வது பிறந்த நாள்.
1998ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற லேரி பேஜ் (Larry Page), செர்ஜி பிரின் (Sergey Brin ) என்ற இரண்டு ஆய்வு மாணவர்கள் தேடுபொறியை உருவாக்கினர்.
அதற்கு ‘googol' என்று பெயரிட்டனர். இதற்கு கணிதத்தில் 10 ன் அடுக்கு 100 என்று அர்த்தம். இதுவே பின்னர் கூகுள்(Google) என்று ஆனது.
தனது பிறந்த நாளையொட்டி, புதிய டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள். அதில், பழைய கணிப்பொறியில் கூகுள் பக்கம் திறக்கப்பட்டு, கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.