கூகுள் நிறுவனம் பிரபல FITNESS TRACKERகள் தயாரிப்பு நிறுவனமான FITBIT நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனம் சுமார் 14 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு FITBIT நிறுவனத்தை வாங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் இணைய தேடல் வணிகத்தைத் தாண்டி முதன்முறையாக அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் துறையில் கால்பதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்காக அணியக்கூடிய ஃபிட்னஸ் டிராகர் தொழில்நுட்பங்கள் அடங்கிய பொருட்களை முதன்முறையாக அறிமுகப்படுத்திய FITBIT நிறுவனம் இந்த துறையில் ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியாகத் திகழ்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் FITBIT நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.