டெக்

இணைய சேவை இல்லாமல் கூகுள் அசிஸ்டண்ட்!

webteam

இணைய சேவை இல்லாமலேயே கூகுள் அசிஸ்டண்டை பயன்படுத்தலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வானிலை விவரம், செய்திகள், வழி தெரிந்துகொள்வது, தகவல்கள் பெறுவது என வாய்ஸ் மூலம் இயக்கப்படுவது கூகுள் அசிஸ்டண்ட். இந்த சேவையை பெற இணையவசதி முக்கியமானது. ஆனால் தற்போது இணைய சேவை இல்லாமலேயே கூகுள் அசிஸ்டண்டை பயன்படுத்தலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூகுள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் மூலம் இணைந்து இணையவசதி தேவையில்லாத கூகுள் அசிஸ்டண்ட் அறிமுகமாகவுள்ளது. இந்த தொலைதொடர்பு நிறுவனங்களில் 000-800-9191-000 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து கூகுள் அசிஸ்டண்ட் சேவையை பெறலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.

தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,பெங்காலி, இந்தி, மராத்தி, குஜராத்தி, மற்றும் உருது ஆகிய மொழிகளில் கூகுள் அசிஸ்டெண்ட் உள்ளது. உலக அளவில் ஆங்கிலத்துக்கு அடுத்தப்படியாக இந்தி மொழி கூகுள் அசிஸ்டெண்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.