டெக்

வரும் மே மாதம் I/O நிகழ்வை நடத்துவதாக அறிவித்துள்ளது கூகுள்!

EllusamyKarthik

கலிபோர்னியாவில் உள்ள Shoreline Amphitheatre கூடத்தில் இந்த ஆண்டுக்கான I/O நிகழ்வு நடத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இன்புட்/அவுட்புட் (I/O) டெவலப்பர் மாநாடு இது. கடந்த 2008 முதல் இந்த மாநாட்டை நடத்தி வருகிறது கூகுள். கொரோனா காலமாக கடந்த 2021 நிகழ்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. 

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நிகழ்வும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என தெரிகிறது. இருந்தாலும் இந்நிகழ்வில் குறைந்த அளவிலான பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூகுள் செய்தி தொடர்பாளர் அலெக்ஸ் தெரிவித்துள்ளதாக தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் ‘தி வெர்ஜ்’ தெரிவித்துள்ளது. கூகுள் ஊழியர்கள் மற்றும் அவர்களது பங்குதாரர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.  

இந்த நிகழ்வில் கூகுள் நிறுவனம் சில முக்கிய அப்டேட் மற்றும் தங்களது தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்வு மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு முக்கிய தலைப்புகளில் கீழ் இந்நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது கூகுள்.