கூகுள் நிறுவனம் தங்கள் ஸ்மார்ட் வாட்ச்-ல் வானிலை, இதயத்துடிப்பு உட்பட 6 நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் முகப்புகளை அப்டேட் செய்துள்ளது.
வளர்ந்து வரும் நவீன உலகில் நாளுக்கு நாள் ஒரு புதுமையான தொழில்நுட்பங்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன. வயர் மூலம் பேசும் தொலைபேசியில் ஆரம்பித்து, இன்று நேருக்கு நேர் பார்த்து பேசிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் வரை ஒரு வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியை இந்த உலகம் கண்டுள்ளது.
இந்த அவரச உலகத்தில் இன்னும் பல தொழில்நுட்ப படைப்புகளை நாம் காண்போம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தொழில்நுட்பம் செல்போனில் மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் தான் வளர்ந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
பல கூடுதல் தொழில்நுட்பங்களுடன் வெளியான அந்த வாட்ச் தற்போது மேலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ‘டைல்ஸ்’ என்ற புதிய ஆப்ஷனை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, டச் ஸ்கிரீன் போனில் ஸ்வைப் செய்வது போல, வாட்ச்-ல் பயன்பாட்டாளர்கள் ஸ்வைப் செய்ய முடியும்.
அதில் ஆறு முகப்புகள் உங்களுக்கு காண்பிக்கும். அவற்றின் மூலம் உங்கள் இலக்குகள், அடுத்த நிகழ்ச்சிகள் ஆகியவற்றை குறித்துக்கொள்ள முடியும். அதேபோன்று சில விஷயங்களை நீங்கள் முன் அறிவிப்பாக அதில் பதிவு செய்துகொள்ள முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு நீங்கள் பதிவு செய்தால், அந்த நேரம் வருவதற்கு சற்று முன்பாக உங்களுக்கு முன் அறிவிப்பு வரும். இதுதவிர தலைப்புச் செய்திகள், இதயத்துடிப்பு, வானிலை ஆகியவற்றையும் நீங்கள் அறிந்துக்கொள்ள முடியும். அத்துடன் இதில் நேர அளவீடு (டைமர்) வசதியையும் உங்களால் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட் வாட்ச் அடுத்த மாதம் சந்தைக்கு வரவுள்ளது.