டெக்

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகுள் மெசேஜஸில் புதிய அம்சங்கள்: முழு விவரம்

EllusamyKarthik

இன்றைய டிஜிட்டல் உலகில் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சாதனம் என்றால் அது ஸ்மார்ட்போன் தான். அதில் மெசேஜிங் சேவைக்கு எப்போதும் டிமாண்ட் இருப்பதுண்டு. இந்நிலையில் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகுள் மெசேஜஸில் (Messages) புதிய அம்சங்களை சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். 

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு குழு சில புதிய அம்சங்களை மெசேஜஸில் சேர்த்துள்ளது. அதன்படி ஐபோன் பயனர்கள் ஆண்ட்ராய்டு போன்களுக்கு அனுப்பும் ஐ-மெசேஜ் எமோஜி ரியாக்ஷன்ஸை பெறும் சப்போர்ட், கூகுள் போட்டோக்களை மெசேஜில் ஒருங்கிணைக்கும் வசதி, யூடியூப் ப்ரிவியூ, தானியங்கு முறையில் ஆட்டோ டெலிட் ஆகும் OTP, முக்கியமான செய்திகளுக்கு ரிப்ளை மற்றும் ஃபாலோ செய்ய பயனர்களை நினைவூட்டும் ‘Nudges’ வசதி உட்பட மேலும் சில அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிப்படியாக இந்த புதிய வசதிகளின் அப்டேட் பயனர்களுக்கு ரோல்-அவுட் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்.