5G Smartphone
5G Smartphone  Pixabay
டெக்

ரூ.10 ஆயிரத்திற்கு கீழே குறைகிறதா 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை?

Snehatara

5ஜி செல்போன்களின் விலை இந்தாண்டு இறுதிவாக்கில் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் குறையக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் 5ஜி சேவைக்கு வேகமாக மாறிவருகின்றனர். இதைத்தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பத்திற்கேற்ற செல்போன்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இந்தாண்டு இறுதிக்குள் குறையக்கூடும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களுக்கான மின்னணு சிப் தயாரிக்கும் தைவானின் மீடியா டெக் நிறுவனத்திற்கும் அமெரிக்காவின் குவால்காம் நிறுவனத்திற்கும் கடும் தொழிற்போட்டி நிலவி வருகிறது. இதனால் அவை கணிசமாக விலையை குறைத்து வருவதால் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்கள் விலை குறையும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Smartphone

இதற்கிடையே 5ஜி சேவை அறிமுகத்திற்கு பிறகு டேட்டா நுகர்வு அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர டேட்டா நுகர்வு கடந்தாண்டு செப்டம்பரில் 22.2 GB டேட்டாவாக இருந்த நிலையில் இந்தாண்டு மார்ச்சில் அது 23.1 GBஆக அதிகரித்துள்ளது. இதேபோல ஏர்டெல் வாடிக்கையாளர்களின் மாதாந்திர சராசரி டேட்டா பயன்பாடு 20.75 GBயில் இருந்து 21.3 GB ஆக உயர்ந்துள்ளது.