காட் ஆஃப் வார் பிஎஸ்4 கேம் வெளியாகும் தேதி மற்றும் விலை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளேஸ்டேஷன் கேம்களில் அதிக ரசிகர்களை கொண்ட பிரபல விளையாட்டாக காட் ஆஃப் வார் திகழ்கிறது. இந்த கேமிற்கு குழந்தைகள் முதல், பெரியவர்களில் வரை ரசிகர்கள் உள்ளனர். ப்ராண்ட் நிறுவனமான சோனி இந்த கேமை வெளியிட்டு வருகிறது. இதன் அனைத்து எடிஷன்களும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் லாபத்தை ஈட்டித்தந்துள்ளது.
இந்த கேம்மின் புதிய எடிஷனான காட் ஆஃப் வார் கலெக்டர்’ஸ் எப்போது வெளியாகும் என கேம் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 20ஆம் தேதி இது வெளியாகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.3,999 ஆகும். அத்துடன் இதை முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேம் பல பிரம்மாண்ட கிராபிக்ஸ்களை கொண்டிருக்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.