டெக்

ஜி-மெயில் பயன்பாட்டில் உள்ள சிக்கல்கள் சீக்கிரம் சரியாகிவிடும்: கூகுள்

Veeramani

ஜிமெயில் பயன்படுத்தும் சில பயனர்கள் உள்நுழைவது, இணைப்புகளைச் சேர்ப்பது மற்றும் செய்திகளைப் பெறுவது போன்ற பல சிக்கல்களை இன்று எதிர்கொண்டனர். பாதிக்கப்பட்ட மின்னஞ்சல் பயனர்களுக்கு எதிர்காலத்தில் செயலிழப்பு பிரச்சினைகள் முற்றிலும் தீர்க்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை இன்று காலை முதல் உலகளாவில் அதிகளவில் இடையூறுகளை எதிர்கொண்டது. இதன் காரணமாக சில பயனர்கள் உள்நுழைவது, இணைப்புகளைச் சேர்ப்பது மற்றும் செய்திகளைப் பெறுவது போன்ற பல சேவை சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால் நிறுவனம் செயலிழப்புக்கான காரணத்தை இன்னும் குறிப்பிடவில்லை. மேலும் கூகுள் நிறுவனம் ஜிமெயில் சிக்கல்கள் குறித்து விரிவாக விசாரிப்பதாகவும் கூறியுள்ளது.

இந்த ஜிமெயில் இடையூறுகளால் எத்தனை பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் இருப்பிடங்கள் குறித்த விவரங்களை கூகிள் குறிப்பிடவில்லை என்றாலும், உலகின் பெரும்பாலான நாடுகள் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டது என தெரியவருகிறது. இன்று டிவிட்டரிலும் ஜிமெயில் பிரச்சினை பற்றிய ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது.