டெக்

உலகளவில் முடங்கிய ஜிமெயில் சேவை : ட்விட்டரில் கேள்வி கேட்ட பயனர்கள்

EllusamyKarthik

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட மின்னஞ்சல் சேவை தளமான கூகுளின் ஜிமெயில் சேவை முடங்கியுள்ளதாக அதன் பயனர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

ஜிமெயிலில் போட்டோ மற்றும் ஃபைல்களை அட்டாச் செய்ய முடியவில்லை என சில பயனர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் ஜிமெயில் தளத்திற்குள் லாக்-இந்த செய்ய முடியவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக நெட்வொர்க் செயலிழப்பை கண்காணிக்கும் பிரபல போர்டல் நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் EDT நேரப்படி அதிகாலை 1:16 மணி முதல் கூகுள் சிக்கல்களை  சந்தித்து கொண்டிருப்பதாக ரிப்போர்ட் செய்திருந்தது.

கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஜிமெயில் முடங்கியுள்ளது. ஜூலையில் இந்தியாவை சேர்ந்த கூகுள் பயனர்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். 

சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூகுள்அதன் பயனர்களுக்கு பதிலளித்துள்ளது.