டெக்

ஜிமெயிலில் புதிய அப்டேட்!

webteam

இன்று ஃபேஸ்புக், வாட்ஸ் ‌அப், டுவிட்டர் போன்ற பல சமூக வலைதளங்கள் வந்த போதிலும் ஜிமெயில் சேவையின் மவுசு குறையவில்லை. அந்த வகையில், ஜிமெயில் சேவையில் புதிய வசதியை அப்டேட் செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

பொதுவாக, ஜிமெயிலில் நாம் ரெஸ்யூம், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பல ஆவணங்களை இணைத்து அனுப்புவது உண்டு. அந்த வகையில், புதிதாக அப்டேட் செய்துள்ள வசதியில், ஜிமெயிலில் இணைத்து அனுப்பப்படும் காணொளிகளை, பதிவிறக்கம் செய்வதற்கு முன்பாக பார்க்க முடியும். அந்த காணொளியைப் பார்த்துவிட்டுத் தேவைபட்டால் டவுன்லோடு செய்துகொள்ளலாம். முன்பு ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யாமல் பார்க்க முடியாது.

இனி வரும் காலங்களில் காணொளி இணைக்கப்பட்ட மின்னஞ்சல்களில் பதிவிறக்கம் செய்யும் குறியீட்டிற்கு அருகில், காணொளி ஒளிபரப்பு (streams - ஸ்ட்ரீம்) செய்யக் கோரும் குறியீடு வழங்கப்படும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.