ஜிமெயிலில் இணைத்து அனுப்பப்படும் பைல்களின் அதிகபட்ச அளவை, கூகுள் நிறுவனம் தற்போது அதிகரித்துள்ளது.
இணையம் வழியாக, மற்றவர்களிடமிருந்து தகவல் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் முதன்முதலில் இமெயில் பயன்படுத்தப்பட்டது. இன்றளவும் இமெயில் மவுசு குறையவில்லை எனலாம். வேலைக்காக விண்ணப்பிக்கும் போதும், வேலை தொடர்பான ஃபைல்களை அனுப்பவும் இமெயில் பயன்படுத்தப்படுகிறது.
ஜிமெயிலில், இதுவரை 25 எம்பி அளவுடைய ஃபைல்களை மட்டும்தான் அனுப்ப முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், கூகுள் டிரைவில் சேமித்து அனுப்பலாம்.
இந்நிலையில், ஜிமெயிலில் ஃபைல்கள் அனுப்பும் அளவை கூகுள் நிறுவனம் தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி, இனி ஜிமெயிலில் இருந்து 50 எம்பி அளவுடைய ஃபைல்களை, ஒரு மெயிலில் இருந்து அனுப்ப முடியும். வைரஸ் பிரச்னைகள் காரணமாக ‘.js’ பைல்களை அனுப்பும் வசதியை கூகுள் நிறுவனம் கடந்த மாதம் முதல் தடை செய்தது குறிப்பிடதகக்து.