டெக்

'ஸ்டியரிங்கே இல்லை': இத்தாலியில் பயன்பாட்டிற்கு வரவுள்ள ஓட்டுநர் இல்லாமல் ஓடும் கார்! ‌

webteam

ஓட்டுநர்களின் சிரமங்களை குறைக்கும் வகையிலும், விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வதற்காகவும் தானியங்கி வாகனங்களை தயாரிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் இணைந்து ஓட்டுநரில்லாமல் ஓடக்கூடிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

குரூஸ் ஆரிஜின் என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் ஸ்டியரிங் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்த காரின் சோதனை ஓட்டம் கலிபோர்னியாவில் நடைபெற்றது.

ராடார், லீடார் கேமரா, சென்சார் ஜிபிஎஸ், கம்ப்யூட்டர் விஸன் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இதுபோன்ற கார்கள் இயக்கப்படுகின்றன. பிற வாகனங்களை முந்துவது, விபத்துகளைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் குறித்த இடத்துக்குச் செல்வது போன்றவற்றை குரூஸ் சிறப்பாகச் செய்யும்.

பாதையின் குறுக்கே வேறொரு வாகனமோ, மனிதரோ திடீரென வந்துவிட்டால், ஓட்டுநர்களை விட மிக துரிதமாக செயல்பட்டு விபத்தைத் தவிர்க்கும் திறன் இந்த காருக்கு உண்டு என்கின்றனர் குரூஸி வடிவமைப்பாளர்கள். சிக்னல்களைத் துல்லியமாகக் கவனித்துச் செயல்படவும் தவறுவதில்லை. இந்த காரின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 9 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.