டெக்

2022 அக்டோபர் வரை ‘சிப்’களுக்கு தட்டுப்பாடு நீடிக்கலாம் : சாம்சங் நிறுவனம் தகவல்

EllusamyKarthik

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள ‘சிப்’களுக்குகான தட்டுப்பாடு வரும் 2022 அக்டோபர் (H2) வரை நீடிக்கலாம் என சாம்சங் தெரிவித்துள்ளது. சிப் தட்டுப்பாடு தொடர்பாக சாம்சங் தலைவர் TM Roh, மூத்த நிர்வாகிகள் அடங்கிய அலுவல் கூட்டத்தில் விவாதித்தாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாம் சாம்சங். அதன்படி தங்கள் நிறுவனத்திற்கு சிப் தயாரித்து கொடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் தங்களுக்கு தேவைப்படும் அளவை தயாரிக்குமாறு அழுத்தம் கொடுப்பது, நான்கு வார தயாரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் சிப்களை முன்கூட்டியே இருப்பு வைப்பது மாதிரியான நடவடிக்கைகளை சாம்சங் எடுக்க உள்ளதாம். 

அதே நேரத்தில் குவால்கம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியானோ அமோன், சிப் தட்டுப்பாடு மெல்ல நீங்கி வருவதாக தெரிவித்துள்ளார். வரும் 2022-இல் இந்த தட்டுப்பாடு முற்றிலும் நீங்கிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான குவால்கம் புராஸசர் கிடைக்காததால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

சிப் தட்டுப்பாடு காரணமாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S21 FE மற்றும் S22 மாதிரியான போன்களின் சந்தை அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டது.