டெக்

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக டொனால்ட் ட்ரம்ப் தொடங்கும் ”TRUTH” சமூக ஊடகம்

Veeramani

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக ஊடகமான ட்ரூத்( TRUTH)” செயலியை தொடங்கவுள்ளார். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த நிறுவனம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மீடியா டெக்னாலஜி குழுமம் மற்றும் சிறப்பு கையகப்படுத்தல் நிறுவனம் (SPAC) ஆகிய நிறுவனங்கள் மூலமாக TRUTH சமூக ஊடகம் உருவாக்கப்படும் என்று இரு அமைப்புகளும் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ட்விட்டரில் தலிபான்கள் அதிக அளவில் இருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம், ஆனாலும் உங்களுக்கு பிடித்த அமெரிக்க அதிபர் இப்போதுவுனமாகிவிட்டார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது ” என்று ட்ரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மேலும், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற மிகப்பெரிய டெக்னாலஜி கொடுங்கோன்மைக்கு எதிராக செயல்பட தனது சொந்த சமூக ஊடக செயலியான ட்ரூத் சோஷியல் ஊடகத்தை தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

ட்ரூத் சமூக ஊடகத்தின் பீட்டா சேவை அடுத்த மாதத்திலிருந்தும், 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முழுமையான அளவிலும் சேவைகளை தொடங்கவுள்ளன. இந்த சமூக ஊடகத்தில் டிஎம்டிஜி, சந்தா, வீடியோ ஆன் டிமாண்ட் சேவை, பொழுதுபோக்கு, செய்திகள் உள்ளிட்ட சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.