டெக்

ஐஃபோன் X ஃபேஸ் ஐடியின் சிறப்பம்சங்கள்

ஐஃபோன் X ஃபேஸ் ஐடியின் சிறப்பம்சங்கள்

webteam

ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஐஃபோன் X ஃபோனில், அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ் ஐடி முறை குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஆப்பிஸ் நிறுவனம் ஐஃபோன் X அல்லது ஐபோன் 10 என்ற புதிய மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் போனை அன்லாக் செய்ய ஃபேஸ் ஐடி என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை வாடிக்கையாளர்கள் மற்றும் மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்த முழு விளக்கத்தை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கத்தில், ஃபோனை அன்லாக் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த விரல் தொடு முறைக்கு பதிலாக, ஃபேஸ் ஐடி என்ற முகம்பதிப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்காக ஃபோனில் உள்ள கேமரா மற்றும் சென்சார் தொழில்நுட்பங்களை இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் எந்த வித தவறுகளும் வர வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்படி உரிமையாளர் தங்களது முகத்தை ஃபோனின் முன் காட்டிய உடன், அவரது முகம் பரிசோதிக்கப்பட்டு ஃபோன் அனலாக் ஆகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

ஹோம் பட்டன் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஃபோனானது, தரமான பட்டன்களுடனும், தண்ணீர் பட்டாலும் பாதிக்கப்படாத வகையிலும் வடிவமைக்கப்பட்டதாகும். அத்துடன் உரிமையாளர் முகத்தில் தழும்புகள், கீரல்கள் ஏற்பட்டாலும், முகத்தை எந்த வகையில் பாவனை செய்து காண்பித்தாலும் ஃபோன் அன்லாக் ஆகும். இருப்பினும் உரிமையாளரின் புகைப்படத்தை காட்டினால் அன்லாக் ஆகாது. அத்துடன் உரிமையாளர் தூங்கும் சமயத்தில் காட்டினாலும் அன்லாக் ஆகாது, கண்கள் திறந்த நிலையில் மட்டுமே அன்லாக் ஆகும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.