டெக்

ஜனவரி 1 முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கு FASTag கட்டாயம்

Veeramani

எலக்ட்ரானிக் கட்டண வசூலை மேலும் ஊக்குவிக்க, ஜனவரி 1, 2020 முதல் பழைய வாகனங்கள் உட்பட அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் FASTag-குகளை கட்டாயமாக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்,  டிஜிட்டல் மற்றும் ஐடி அடிப்படையிலான கட்டணங்களை FASTag மூலம் செலுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, "பழைய வாகனங்களில் 2021 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் FASTag கட்டாயமாக்கப்பட வேண்டும், அதாவது சி.எம்.வி.ஆர், 1989 இன் சட்ட திருத்தங்களின்படி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1க்கு முன் விற்கப்பட்ட எம் மற்றும் என் வகை மோட்டார் வாகனங்களுக்கு (நான்கு சக்கர வாகனங்கள்) FASTag கட்டாயம் " என கூறப்பட்டுள்ளது.

முற்றிலும் மின்னணு வழிமுறைகள் மூலமாக மட்டுமே டோல் பிளாசாக்களில் கட்டணம் செலுத்துவதை உறுதி செய்யவும், வாகனங்கள் டோல் பிளாசாக்கள் வழியாக தடையின்றி கடந்து செல்வதையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய படியாக இது பார்க்கப்படுகிறது. பல வழிகளில் FASTag கிடைக்கும் வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் வாகன உரிமையாளர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தங்கள் வசதிக்கேற்ப அவற்றை தங்கள் வாகனங்களில் ஒட்டிக் கொள்ள முடியும். FASTag இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.