டெக்

உலகின் அதிவேக தானியங்கி கார்..!

உலகின் அதிவேக தானியங்கி கார்..!

webteam

உலகில் பல தானியங்கி கார்களை பல நிறுவனங்கள் வெளியிட்ட போதிலும், அதிக வேகம் கொண்ட தானியங்கி கார் தற்போது அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

புதிய வகை கார் மாடல்களில் தனக்கென முத்திரை பதித்த ஃபாரடே நிறுவனம் உலகின் அதிவேக தானியங்கி கார்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டின் இறுதியில் இதற்கான முயற்சியை தொடங்கியது அந்நிறுவனம்.

ஃபாரடே நிருவனத்தின் இந்த அதிவேக காருக்கு FF 91 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் சக்தி வாய்ந்த 1050 ஹார்ஸ்பவர் என்ற என்ஜின்கள் பொருத்தப்படவுள்ளது. இதனால், இந்த காரானது, 2.40 வினாடிகளில் 0-100கி.மீ. வேகத்தை தொட்டுவிடும். 375 மைல்களை அசத்தலாக இது கடக்க கூடியது. இந்த மாடல் கார்களில் முகம் மூலம் அடையாளம் காணும் (face recognition)ஆப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், காரின் கதவை திறப்பது, மூடிக்கொள்வது சுலபமாகும்.

FF 91 மாடல் காரின் மாதிரி வடிவத்தை திங்களன்று ஃபாரடே நிறுவனம் வெளியிட்டுள்ளது. பூம் லைட் பொருத்தப்பட்டு அசத்தலாக வரும் இந்த மாடல் அதிவேக தானியங்கி கார் பட்டியலில் முதலிடத்தை பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தானியங்கி தொழில்நுட்பத்தில் சவாலான பாணியில் உருவாக்கப்பட்டுள்ள அதிவேக கார் அடுத்தாண்டு முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.