பிரான்ஸ் அரசுக்கு ஃபேஸ்புக் 118 மில்லியன் டாலர்களை வரியாக செலுத்தவுள்ளது
பிரான்ஸ் அரசு வரி விதிப்பில் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. குறிப்பாக ஃபேஸ்புக், கூகுள்,ஆப்பிள், அமேசான் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளது
அதன்படி 10 வருட கணக்கீடு மற்றும் அபராதம் என ஃபேஸ்புக் மட்டும் 118மில்லியன் டாலர்களை பிரான்சுக்கு வரியாக செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் செய்திதொடர்பாளர், 2008-2018ம் ஆண்டுகளுக்கான வரி 106மில்லியன் யூரோக்கள் என பிரான்ஸ் அதிகாரிகள் வரி தணிக்கை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். ஆனால் பிரான்ஸ் உடனான ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை ஃபேஸ்புக் செய்திதொடர்பாளர் தெரிவிக்கவில்லை.
பிரான்ஸ் கணக்கீட்டின் படி 2019ல் ஃபேஸ்புக்கின் வருமானம் அதன் முந்தைய ஆண்டுகளை விடவும் இரட்டிப்பாகியுள்ளது. 747யூரோக்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக கணக்கீடு தெரிவித்துள்ளது.