டெக்

13 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய இன்ஸ்டாகிராம் வெர்ஷனை வடிவமைத்து வரும் பேஸ்புக்!

13 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய இன்ஸ்டாகிராம் வெர்ஷனை வடிவமைத்து வரும் பேஸ்புக்!

EllusamyKarthik

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தள ஊடகமான பேஸ்புக் நிறுவனம் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய இன்ஸ்டாகிராம் வெர்ஷனை வடிவமைத்து வருகிறது. அதனை பேஸ்புக் நிறுவனம் உறுதி செய்துள்ளது. முழுவதும் குழந்தைகளுக்கு என பிரத்யேக போட்டோ ஷேரிங் அப்ளிகேஷனை உருவாக்கி வருகிறது. 

“தொடர்ந்து பெற்றோர்கள் இடத்தில் குழந்தைகள் இன்ஸ்டாவை பயன்படுத்த வேண்டுமென கேட்டு வருவதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. தங்களது நண்பர்களுடன் தொடர்பில் இருக்க குழந்தைகள் விரும்புவதாக பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பேரெண்ட் கண்ட்ரோலில் இயங்கும் வகையில் வடிவமைத்து வருகிறோம்” என பேஸ்புக் தரப்பு தெரிவித்துள்ளது. 

தற்போது 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பேஸ்புக் தளத்தில் பயனராக செயல்பட முடியாது என்பது குறிபிடத்தக்கது.