சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் சரி செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் பரிதவித்து வந்தனர்.
இந்தச் செயலிகளிலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து முக்கியமான மூன்று சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனர்கள் ட்விட்டர் பக்கம் குவிந்தனர். #facebookdown, #instagramdown, #WhatsAppdown ஆகிய ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த நிலை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம்,“நேற்று எங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன. எனவே ஒரு சில இடங்களில் பயனாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தற்போது நாங்கள் சரி செய்து விட்டோம்” எனத் தெரிவித்துள்ளது.