டெக்

அமெரிக்கா - தெற்கு ஆசியாவின் இணைய இணைப்பை அதிகரிக்க கடலுக்கு அடியில் கேபிள் : ஃபேஸ்புக்

EllusamyKarthik

பிராந்தியங்களுக்கு இடையிலான இணைய இணைப்பை அதிகரிக்கும் நோக்கில் கடலுக்கு அடியில் கேபிள் அமைக்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மூலம் சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் வட அமெரிக்காவை இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் பிராந்தியங்களை சார்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது பேஸ்புக். 

"எக்கோ மற்றும் Bifrost என பெயரிடப்பட்ட இவை ஜாவா கடலைக் கடந்து புதிய மாறுபட்ட பாதை வழியாகச் செல்லும் முதல் இரண்டு கேபிள்களாக இருக்கும்” என பேஸ்புக் நிறுவனத்தின் நெட்வொர்க் இன்வெஸ்ட்மெண்ட் துணைத் தலைவர் கெவின் சால்வடோரி தெரிவித்துள்ளார். 

இந்த கேபிள்கள், இந்தோனேசியாவின் சில முக்கிய பகுதிகளுடன் அதாவது வட இந்தோனேசியாவுடன் அமெரிக்காவை நேரடியாக இணைக்கும் முதல் கேபிள் பாதை இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

"எக்கோ" கூகிள் மற்றும் இந்தோனேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான எக்ஸ்.எல் ஆக்ஸியாடாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது 2023 க்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தோனேசியாவின் டெலின் மற்றும் சிங்கப்பூர் கூட்டு நிறுவனமான கெப்பல் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் Bifrost 2024 க்குள் முடிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.