டெக்

ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..!!

webteam

சமூக வலைதங்களில் முதன்மையாக இருப்பது ஃபேஸ்புக். அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகம். உலக மக்கள் தொகையில் கால் பங்கிற்கும் மேலானாவர்கள் ஃபேஸ்புக் பயனாளிகளாக உள்ளனர்.  அதற்கேற்ப ஃபேஸ்புக் செயலியும் புதிய புதிய அப்டேட் வசதிகளுடன் வளர்ச்சியடைந்துக் கொண்டே வருகிறது. பேஸ்புக்கின் இந்தப் புதுமையால்தான், பயனாளர்கள் இன்று வரை பேஸ்புக்கை தவிர மற்ற எந்தச் செயலியின் மீது அதிக ஈடுபாட்டை காட்டுவதில்லை என்கின்றன ஆய்வின் முடிவுகள். 

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அப்ளிக்கேஷனில் சில புது மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் மெசஞ்சர் அப்ளிக்கேஷன் மெத்தமே 10எபி தான் இருக்கும். ஆகையால் அதை ஈசியாக டவுன்லோடு  செய்துக்கொள்ளாம். இனிமேல் மெசஞ்சர் லைட்டில் வீடியோ சேட்டிங் செய்யலாம் என்பதே அந்த அறிவிப்பாகும்.  இதுவரை புகைப்படம், லிக், மற்றும் எழுத்து மூலம் பதிவுகள் அனைத்தும் மெசஞ்சர் மற்றும் மெசஞ்சர் லைட்டில் பொதுவாகவே இருந்தது. தற்பொழுது ஃபேஸ்புக் லைட்டில் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து பேசிகொள்ளாம். இதன் மூலம் மெசஞ்சர் லைட் வழக்கமாக பயனாளர்கள் வந்து தங்களது நண்பர்களுடம் சாட் செய்யும் வலது பக்கத்தில் வீடியோ ஐகானும் இருக்கும்.

இதனால் ஃபேஸ்புக் தனது செயலிகள் மூலம் தனது வாடிக்கைளார்களுக்கு எளிதில் பயன்படுத்தும் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்து கொண்டே இருக்கிறது. மக்களும் மகிழ்ச்சியுடன் ஃபேஸ்புக் தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.