டெக்

ஃபேஸ்புக் அப்டேட்: வந்தாச்சு மெசன்ஜர் டே!

ஃபேஸ்புக் அப்டேட்: வந்தாச்சு மெசன்ஜர் டே!

webteam

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், உலகம் முழுவதும் சுமார் 200 கோடி வாடிக்கையாளர்களை தன்னுள் வசப்படுதியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய அம்சங்களை அப்டேட் செய்து வருகிறது.

ஃபேஸ்புக்கில் மெசன்ஜர் ஆப், சாட்டிங்கிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. பல இளைஞர்களை கவர்ந்த மெசன்ஜரில் ‘மெசன்ஜர் டே’ எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் இந்த புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்னாப்சாட் வசதியுடன் மெசன்ஜரில் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் செய்து கொண்டிருக்கும் அல்லது செய்யவிருக்கும் வேலைகளை கார்டன் எமோஜ் உடன் நம்முடைய உணர்வுகளை வீடியோவாக காமெடியுடன் எடிட் செய்து அனுப்ப முடியும். நண்பர்களுடனும், குரூப் நண்பர்களிடமும் பரிமாறிக்கொள்ளப்படும் இந்த வீடியோக்கள் 24 மணிநேரத்தில் தானாக அழிந்துவிடும். தொடர்ந்து நமது மெசேஜை டெக்ஸ்ட் ஆக அனுப்பாமல் காமெடியாக ஸ்டிக்கர்கள், வீடியோ, எமோஜ் போன்ற சுவாரசியமான அம்சங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். மெசன்ஜர் செட்டிங்க்சில் கேமரா ஐகான் மற்றும் எடிட்டிங் கருவிகள் போன்றவை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்த ஸ்னாப்சாட் வீடியோ பகிர்வு நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.