டெக்

டிக் டாக் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தை பிடிக்க பேஸ்புக் முயற்சி?

டிக் டாக் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தை பிடிக்க பேஸ்புக் முயற்சி?

EllusamyKarthik

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எழுந்த எல்லை பிரச்சனையை அடுத்து டிக் டாக் உட்பட சீன மொபைல் அப்ளிகேஷன்களை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்தது மத்திய அரசு. 

அப்போதிலிருந்தே டிக் டாக் விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க பல்வேறு டெக் நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இதில் ஒரு சில நிறுவனங்கள் டிக் டாக் அபிகேஷனுக்கு மாற்று அப்ளிகேஷனை கொண்டு வரவும் முயற்சிக்கின்றன.

இந்த ரேஸில் புதிதாக இணைந்துள்ளது உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக். இதற்காக அதன் துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் மூலமாக ‘ரீல்ஸ்’ அப்ளிகேஷனை லான்ச் செய்தது.

“தற்போது பேஸ்புக் நிறுவனமே தனது அப்ளிகேஷனில் ‘ஷார்ட் வீடியோ பார்மெட்டை’ கொண்டு வர முயன்று வருகிறது. தற்போது அதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன” என தெரிவித்துள்ளார் சமூக வலைத்தள வல்லுனரான மேட்.

பெரும்பாலும் இந்த ஷார்ட் வீடியோ சேவை இந்திய சந்தையை டார்கெட் செய்தே அறிமுகமாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் டிக் டாக் தடையை அடுத்து பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.