டெக்

கசிந்த 50 கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்களில் மார்க் ஜூக்கர்பெர்கின் தகவல்!

EllusamyKarthik

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வரும் பயனர்களில் சுமார் 50 கோடிக்கும் மேற்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் இணையத்தில் பகிர்ந்திருந்தனர். அப்படி கசிவான பயனார்களில் பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்கின் சுய விவரங்களும் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை எத்திக்கல் ஹேக்கர்ஸ் சிலரும் உறுதி செய்துள்ளானர். 

மார்க் ஜூக்கர்பெர்கின் பெயர், இருப்பிடம், திருமண விவரம், பிறந்த நாள், பேஸ்புக் பயனர் ஐடி என அனைத்தும் இதில் கசிந்துள்ளதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அவர் மட்டுமல்லாது பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் கிறிஸ் ஹியூஸ் மற்றும் டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் ஆகியோரின் தகவல்களும் கசிந்துள்ளன என சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் பேஸ்புக் நிறுவனத்திடம் இந்த விவகாரம் குறித்து அறிய ஆராய்ச்சியாளர்கள் தொடர்பு கொண்ட போது மார்க் ஜூக்கர்பெர்க் தகவல் கசிவு குறித்து எந்தவித பதிலும் சொல்லவில்லை என கூறப்படுகிறது.