பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம் ரூ.20 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கிற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாண்டில் 76% அதிகரித்து 20 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்த மூன்று மாதங்களில் 17 சதவிகிதம் அதிகரித்து 194 கோடியை எட்டி இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.