டெக்

ஆன்லைனில் 50 கோடி ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் சொந்த விவரங்கள்... அதிர்ச்சி தகவல்

webteam

ஃபேஸ்புக்கில் இருக்கும் 50 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் சொந்த விவரங்கள் ஆன்லைனில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பிசினஸ் இன்சைடர் தளம் வெளியிட்ட தகவலின்படி, 106 நாடுகளில் உள்ள பேஸ்புக் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்கள், பேஸ்புக் ஐடி, பெயர்கள், வசிக்கும் இடம், பிறந்தநாள் மற்றும் இ- மெயில் உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைனின் பல்வேறு இணையதளங்களில் இருப்பது தெரியவந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

பேஸ்புக் கடந்த சில வருடங்களாக வாடிக்கையாளர்களின் சொந்த விபரங்களை பாதுகாப்பதில் சிக்கலை சந்தித்து வருகிறது. முன்னதாக கடந்த 2018 ஆண்டு பேஸ்புக்கில், மொபைல் எண் மூலம் ஒருவரை தேடும் ஆப்ஷன் தடை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த 2019/ஆம் ஆண்டு உக்ரனைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இருக்கும் வாடிக்கையாளர்களின் பெயர்கள், மொபைல் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைனில் பரவலாக கிடைப்பதாக தெரிவித்தார்.