டெக்

உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் திருடு போயிருச்சானு தெரிஞ்சிக்கணுமா?

உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் திருடு போயிருச்சானு தெரிஞ்சிக்கணுமா?

உலகெங்கும் இருக்கும் பேஃஸ்புக் பயனாளர்களுக்கு கடந்த சில நாள்களாக மன உளைச்சல் தரும் செய்தியாகவே வந்துக்கொண்டு இருக்கிறது. பயனாளர்களின் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனம் திருட்டுப் போகவிட்டுள்ளது என்ற செய்திதான் அது. நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஃபேஸ்புக்கே கதி என இருந்தவர்களுக்கு இப்போது தூக்கமே வராமல் போனதுதான் மிச்சம். இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க்கும் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்டுதான்.

சரி, விஷயத்துக்கு வருவோம் கடந்த சில நாள்களாக ஃபேஸ்புக்கில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அது, ஃபேஸ்புக்கில் உள்ள கமெண்ட் பாக்ஸில் BFF என டைப் செய்து உங்கள் அக்கவுண்ட் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என தெரிந்து கொள்ளுங்கள் என்பதுதான். நீங்கள் BFF என டைப் செய்தவுடன், அந்த எழுத்துகள் உடனடியாக பச்சை நிறமாக மாறினால் உங்கள் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்றும், நிறம் மாறாமல் இருந்தால் திருடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன பலர் bff என டைப் கெமெண்ட் பாக்ஸில் டைப் அடிக்க ஆரம்பித்திருக்கின்றனர். 

ஃபேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF என்றால் என்ன ?

ஆனால் இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது "ஜனவரி 29 ஆம் தேதி முதல் புதிதாக சேர்க்கப்பட்ட விசைவார்த்தை (Keyword) BFF -க்குகு Best Friend Forever என்று அர்த்தம் ஆகும். இதனை டைப் செய்தவுடன் பார்த்தால் இரண்டு கைகள் தட்டிக் கொள்ளும். மேலும் அது பச்சை நிறத்தில் மாறவில்லை என்றால் பயப்பட வேண்டாம் பழைய தொலைபேசிகளில் நிறம்மாறாது. இதுபோன்று சில விசைவார்த்தைகள்(Keyword) முகநூலில் உள்ளது. உதாரணத்துக்கு, EG:- Congrats. எனவே ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் இந்த BFF வார்த்தை குறித்து அச்சமடைய தேவையில்லை என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்போ இதுவும் பொய்யா ? அப்போ ஃபேஸ்புக் அக்கவுண்ட் பாதுகாப்பா இருக்குதா இல்லையானு தெரிஞ்சுக்க வழியே இல்லையா ?