டெக்

எப்பவும் ஸ்மார்ட்போனா? எச்சரிக்கிறது ஆய்வு

webteam

ஸ்மார்ட்போன்களை அதிமாகப் பயன்படுத்தும் இளம் வயதினர் பல்வேறு உடல்நலக்கோளாறுகளை சந்திப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது ஸ்மார்ட்போன்கள். சோறு இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் எல்லோரும். இளம் வயதினர்தான் ஸ்மார்ட் போன்களில் அதிக நேரம் செலவழிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. எப்போது பார்த்தாலும் அப்படி இருப்பவர்களுக்கு மன ரீதியான பிரச்னை ஏற்படும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வட கரோலினாவிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு கவனக் குறைபாடு, சுறுசுறுப்பாக இயங்க முடியாதது, நடத்தை முறைகளில் மாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

தினமும் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சுமார் 151 இளம் வயதினரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரியவந்துள்ளது.