நியூராலிங்க் சிப் புதிய தலைமுறை
டெக்

நீங்கியது 20 ஆண்டுகால இருள்.. எலான் மஸ்கின் நியூராலிங்க் சிப் தந்த அதிசயம்!

நாம் நினைப்பது எல்லாம் கணினியில் தகவல்களாக மாறினால் எப்படி இருக்கும்.. அந்த ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது எலான் மஸ்கின் நியூராலிங்க் சிப்...

PT WEB

நாம் நினைப்பது எல்லாம் கணினியில் தகவல்களாக மாறினால் எப்படி இருக்கும்.. அந்த ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது எலான் மஸ்கின் நியூராலிங்க் சிப்... ஆட்ரி க்ரூஸ்.. இவருக்கு இப்போ 40 வயசு... 20 வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல, கழுத்துக்குக் கீழ மொத்தமா பக்கவாதம் வந்து, சக்கர நாற்காலிலேயே முடங்கிட்டாங்க... பேச முடியாது, கை கால அசைக்க முடியாதுன்னு ரொம்பவே கஷ்டப்பட்டாங்க... மத்தவங்க சைகை மூலமா, இல்ல பக்கத்துல இருக்கவங்க மூலமாத்தான் அவங்க பேச முடியும்.

இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில இருந்த இவருக்கு, நியூராலிங்க் ஒரு புது வாழ்க்கை கொடுத்திருக்கு... ஒரு குட்டி சிப்பை, ஆட்ரி க்ரூஸ் மண்டைக்குள்ள ஆபரேஷன் பண்ணி வெச்சிருக்காங்க. இந்தச் சிப் என்ன பண்ணும்னா, நம்ம மூளையில இருந்து வர்ற சிக்னல்களை அப்படியே கம்ப்யூட்டருக்கு அனுப்பும்... இதனால, தன் கை விரல்களை அசைக்காமலேயே, மனசுக்குள்ள நினைச்சதை கம்ப்யூட்டர்ல டைப் பண்ண முடியுது.. இது ஒரு பெரிய புரட்சியாவே பார்க்கப்படுதுங்க..

சமீபத்துல தன்னோட பேர, கம்ப்யூட்டர்ல எழுதி காமிச்சாங்க பாருங்க... இத பாத்து.. உலகத்துல உள்ள அத்தனை பேரும் வாயடைச்சு போய்ட்டாங்க.. இவரின் தன்னம்பிக்கையான செயல், பக்கவாதத்துல கஷ்டப்படுற லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையையும், நாமளும் மீண்டும் நம்ம வாழ்க்கையை வாழ முடியும்ங்கிற ஒரு உத்வேகத்தையும் கொடுத்திருக்கு... கம்யூட்டர.. FULL -ஆ சிந்தனையால ஆட்ரி க்ரூஸ் கட்டுப்படுத்திறாருனு எலான் மஸ்கும் சொல்லியிருக்காரு. இந்த கண்டுபிடிப்பு, மூளைக்கும் கம்ப்யூட்டருக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்துற டெக்னாலஜியோட எதிர்காலத்தை ரொம்பவே பிரகாசமாக்குது... இது பக்கவாதத்துல இருக்குறவங்களுக்கு மட்டுமில்லாம, நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் இருக்குறவங்களுக்கும், கை, கால் இழந்தவங்களுக்கும் ஒரு வரப்பிரசாதமா அமையும்னு எதிர்பார்க்கப்படுது. மூளையோட எண்ணங்கள் மூலமா செயற்கை உறுப்புகளை இயக்கலாம், கம்ப்யூட்டரை கண்ட்ரோல் பண்ணலாம்னு இன்னும் பல சர்ப்ரைஸ்கள் வெயிட்டிங்ல இருக்கு...