Elon Musk- Mark Zucker
Elon Musk- Mark Zucker Twitter
டெக்

“மார்க் உடனான சண்டை ட்விட்டரில் ஒளிபரப்பப்படும்” - நாள் முழுவதும் பளு தூக்கிவருவதாக மஸ்க் ட்வீட்!

Rishan Vengai

சமீபமாக சமூகவலைதளங்களில் அதிகமாக பேசப்படும் விசயமாக இருந்துவருவது எலான் மஸ்க் மற்றும் மார்க் சக்கர்பெர்க் இருவருக்குமான வார்த்தை போர் தான். ஒருவர் “வா சண்டை வச்சிக்கலாம், நான் ஜெயிச்சா உன் சோஷியல் மீடியா உரிமம் ஒருநாள் எனக்கு, நீ ஜெயிச்சா என் சோஷியல் மீடியா உரிமம் ஒருநாள் உனக்கு” என கூறுவதும், மற்றொருவர் “நான் தயார் சண்டைய எங்க வச்சிக்கலாம், எப்போ வச்சிக்கலாம் என சினிமா பட டயலாக்கை போல் கூலாக கேட்பதும்” என இரண்டு விதமான வார்த்தை பரிமாற்றங்களும் முதலில் கேளிக்கையாகவே பார்க்கப்பட்டது.

Elon Musk

ஆனால் அதற்கு பிறகான எலான் மஸ்க் மற்றும் மார்க் சக்கர்பெர்க் இருவரும் பயிற்சி மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், உண்மையிலேயே இவர்கள் மோதிக்கொள்ளத்தான் போகிறார்கள் என்ற சலசலப்பும், பேச்சும் அதிகமானது. இந்நிலையில் இவர்கள் உண்மையிலேயே கூண்டு சண்டைக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளப்போகிறார்கள் என்ற குழப்பமும், கேள்வியும் நிலவி வந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக மார்க் சக்கர்பெக் உடனான சண்டை ட்விட்டரில் நேரலையாக ஒளிப்பரப்பப்படும் என்று மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

இவ்வளவு தீவிரமான மோதலுக்கு என்ன காரணம்?

ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்தே எலான் மஸ்க், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற மெட்டா செயலிகளில் கிடைக்கும் அனைத்து அம்சங்களையும் ட்விட்டரில் கொண்டுவருவதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட தொடங்கினார். முன்னதாக ப்ளூ டிக் உரிமையாளர்கள், அதிகப்படியான வார்த்தைகள் கொண்ட ரைட்டப், அதிக நேரம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்தல் என பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திய எலான், விரைவில் லைவ் வீடியோ வசதி, வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் போன்றவையும் செயலில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார்.

threads and twitter

எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் இரண்டு செயலிகளிலும் மெட்டா பல அப்டேட்களை செய்யத் தொடங்கியது. இவை அனைத்திற்கும் ஒருபடி மேலாக சென்ற மார்க் சக்கர்பெர்க், ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தார். அங்கு தான் கொஞ்சம் ஆட்டம் கண்டார் மஸ்க். காரணம் த்ரெட்ஸ் செயலில் அறிமுகமான 5 மாதத்திற்குள் 100 மில்லியன் பயனர்களை பெற்று டிஜிட்டலில் புதிய சாதனையை நிகழ்த்தி காட்டியது.

Elon Musk

அதிலும் அதில் அறிமுகம் செய்யப்பட்ட டேக் பிரேக் ஆப்சன், நோடிஃபிகேசன் பாஸ், தகாத வார்த்தைகளை தவிர்ப்பது போன்ற அம்சங்கள் பயனர்களை ஈர்த்தது. இதனை எதிர்பார்க்காத மஸ்க், த்ரெட்ஸில் மார்க் இடைவெளி விட்டு போஸ்ட் செய்வதை கூட எடுத்து அவருக்கு அந்த செயலியில் அக்கறை இல்லை என்றெல்லாம் புலம்பித்தள்ளி ட்வீட் செய்தார். அப்போதுவரை இருந்த தொழில்ரீதியான போர் தான், த்ரெட்ஸ் செயலிக்கு பின்னர் வார்த்தை போராக மாறியது. தற்போது வார்த்தை போர் நிஜ சண்டையாகவே மாறியுள்ளது.

இது பேச்சு சுதந்திரத்திற்கான சண்டை! நேரலையில் ஒளிபரப்பப்படும்!

மார்க் உடனான சண்டை குறித்து தொடர்ச்சியாக பதிவிட்டு வரும் எலான் மஸ்க், சமீபத்திய பதிவில் “எலான் மஸ்க் மற்றும் மார்க் சக்கர்பெர்க் இருவருக்கும் இடையேயான சண்டை ட்விட்டரில் நேரலையாக ஒளிப்பரப்பப்படும். அதன் மூலம் வரும் அனைத்து வருமானமும் தொண்டு நிறுவனங்களுக்கு செல்லும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த சண்டைக்காக நாள் முழுவதும் பளு தூக்கிவருவதாக தெரிவித்துள்ள மஸ்க், இது பேச்சு சுதந்திரத்திற்கான சண்டை என்றும், அதில் தான் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

இவர்களுக்கான சண்டை நடைபெறுமா என்ற கேள்விக்கு நடைபெறும் என்பதை பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார் மஸ்க். அவருடைய பதிவில் எப்போது நடைபெறும்? என்ற கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.