வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் எக்ஸ் தளம்
டெக்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் ‘மாதிரி ராக்கெட்’ வெடித்து சிதறியதால் பரபரப்பு!

நேற்று எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் மாதிரி ராக்கெட்டானது டெக்சாஸிலிருந்து ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.

Jayashree A

நேற்று எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் மாதிரி ராக்கெட்டானது டெக்சாஸிலிருந்து ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.

டெக்சாலில் உள்ள ஏவுதள மையத்தில் இருந்து ஸ்டார்ஷிப், மாதிரி செயற்கைக்கோளுடன் கூடிய முதல் சோதனை பேலோடை நேற்று ஏவியது. மெக்சிகோ வளைகுடாவில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் ராக்கெட் இடிபாடுகளில் சிக்காமல் இருக்க ஸ்டார்ஷிப் திருப்பி விடப்பட்டன. பின் புறப்பட்ட 8 நிமிடங்களுக்குப் பிறகு ஸ்பேஸெக்ஸ் மிஷன் கண்ட்ரோல் ஸ்டார்ஷிப்புடனான அனைத்து தொடர்பையும் இழந்தது.

அதன் பிறகு ஸ்டாஷிப்பின் சூப்பர் ஹெவிபூஸ்டரில் இருந்த மேல்நிலை உடைந்து சுக்குநூறாக வெடித்துசிதறியது (இந்த ராக்கெட்டை கொண்டுதான் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல திட்டமிட்டனர் என்பது கூடுதல் தகவல்).

இருப்பினும் ஸ்டார்ஷிப்பில் பூமிக்கு மீண்டும் கொண்டுவரக்கூடிய மறுபயன்பாட்டு பூஸ்டர்கள் வெற்றிகரமாக கீழே இறங்கின. அவற்றை ஏவுதளத்தில் இருந்த கருவிகள் பாதுகாப்பாக பிடித்துக்கொண்டன. இருந்த போதிலும், என்ஜின் ஃபயர்வாலின் மேற்புறத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு முதல் நிலைப்பகுதி வெடித்தது. இது ஸ்பேஸ் எக்ஸின் 7வது ஸ்டார்ஷிப்பின் பரிசோதனை முயற்சி மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சில விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 20 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக FlightRadar24 தெரிவித்துள்ளது.