டெக்

ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா

ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா

jagadeesh

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை போல அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியுள்ளது.

ஆயுத உற்பத்தியில் அடுத்தக் கட்டத்தை எட்டும் இந்தியா, ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும், திறன் கொண்டவை தான் ஹைபர்சோனிக் ஏவுகணைகள். அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் தான் தீவிர கவனம் செலுத்துகின்றன. 

இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. ஹைபர்சோனிக் ஏவுகணைகள் தான் எதிர்காலமாக இருக்கும் என்கின்றனர் பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுனர்கள். இதற்கு காரணம் இது ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும், அதிவேகத்தில் அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்குதல் நடத்தும், ஏவுகணை தடுப்பு அமைப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும், எந்த அமைப்புகளாலும் தடுக்கவோ, ட்ராக் செய்யவோ முடியாது. 

டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் இறங்கியுள்ளது. இதனை சோதிக்கவும், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் காற்று சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது, இதனை விரைவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நமது பாதுகாப்புக்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் வளர வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், அடுத்த தலைமுறை ஏவுகணை என கூறப்படும் ஹைபர்சோனிக் ஏவுகணைகள், தயாரிப்பில் இறங்கியுள்ளது.