டெக்

’டபுள் ஸ்விட்ச்’ ஹேக்கிங்: திருடப்படும் கணக்குகள்!

’டபுள் ஸ்விட்ச்’ ஹேக்கிங்: திருடப்படும் கணக்குகள்!

webteam

ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்து, அசல் அக்கவுண்ட்டை அழித்து, க்ளோனிங் கணக்குகளில் தவறான தகவல்களை பரப்பும் அபாயம் தற்போது வெனிசுலா, மியான்மர் நாடுகளில் அதிகரித்து வருகிறது.

மியான்மர், வெனிசுலா, பஹ்ரைன் நாடுகளில், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அதிக பின்தொடர்வோர் எண்ணிக்கையைக் கொண்ட முக்கிய நபர்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது. ஹேக் செய்த அசல் கணக்கை, அப்படியே அச்சு மாறாமல் க்ளோனிங் செய்துவிட்டு, அசல் கணக்கை அழித்து தவறான தகவல்களை பரப்பும் அபாயம் அதிகரித்து வருகிறது. இத்தகைய ஹேக்கிங் மற்றும் க்ளோனிங் ’டபுள்ஸ்விட்ச் (DoubleSwitch)’ என அழைக்கப்படுகிறது. இந்த ஹேக்கிங் தாக்குதலான ‘டபுள்ஸ்விட்ச்’ குறித்த தகவல்களை முதன்முதலாக டிஜிட்டல் உரிமைகள் குழுவான ’ஆக்செஸ் நவ்’ வெளிக்கொண்டு வந்துள்ளது.

ட்விட்டர் கணக்கு திருடப்பட்டதும், தொடர்பானவர்களின் மின்னஞ்சல்களும் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை மீட்க முயற்சிக்கும்போது, மின்னஞ்சலுக்கு செல்லும் கன்பார்மிங் மெயில்கள் மீண்டும் ஹேக்கர்களையே அடையுமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட நபர் தனது கணக்கை மீட்பது மேலும் சிரமமானதாக ஆகிறது.

இத்தகைய டபுள்ஸ்விட்ச் ஹேக்கிங் குறித்த தகவல்களை வெளிக்கொண்டு வந்த ஆக்செஸ் நவ், ’ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய கணக்கிலும் இந்த அபாயங்கள் உள்ளன. எனினும் மல்டி ஃபேக்டர் ஆதண்டிகேஷன் (Multi Factor Authentication) என்னும் முறையைப் பயன்படுத்தி தங்கள் கணக்குகளை பாதுகாத்துக்கொள்ள முடியும்’ என்று தெரிவித்துள்ளது.